தேசிய செய்திகள்

மும்பையில் பேருந்து-டிராக்டர் மோதி விபத்து.. 5 பக்தர்கள் உயிரிழப்பு

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள டோம்பிலி நகரை சேர்ந்த பக்தர்கள், கோவில் நிகழ்ச்சிக்காக பந்தர்பூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர்.

பேருந்து, மும்பை-புனே விரைவு சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து