தேசிய செய்திகள்

மோடியின் கொள்கைகளால் இந்தியா பொருளாதார மந்தநிலைக்குள் சிக்கித் தவிக்கிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மோடியின் கொள்கைகளால் இந்தியா பொருளாதார மந்தநிலைக்குள் சிக்கித் தவிக்கிறது என்று ராகுல்காந்தி குற்றச்ம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை சாடி உள்ளார். மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள ஒரு அறிக்கையை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை