தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் 13-ந் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல்

அ.தி.மு.க.வை சேர்ந்த முகம்மது ஜான் மறைவால் ஏற்பட்ட மாநிலங்களவை காலியிடத்தை நிரப்ப செப்டம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தினத்தந்தி

24-ந் தேதி மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகம்மது ஜான். எம்.பி.யாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 23-ந் தேதி அவர் மரணம் அடைந்தார்.அதனால் ஏற்பட்ட காலி யிடத்தை நிரப்ப தேர்தல் கமிஷன் நேற்று இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. செப்டம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாள் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும்.

வாக்குப்பதிவு

செப்டம்பர் 1-ந் தேதி (புதன்கிழமை) மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள்.செப்டம்பர் 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.செப்டம்பர் 15-ந் தேதி யுடன் தேர்தல் நடவடிக்கை ககள் முடிவடையும்.தமிழ்நாடு சட்டசபை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

நேரம்

வேட்புமனுக்களை பிற ஆவணங்களுடன் மேற்கண்ட இரு அதிகாரிகளில் யாரிடமாவது தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மனுதாக்கலுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாட்களில், விடுமுறை நாட்களான வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை), 29-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை), 30-ந் தேதி (கிருஷ்ணஜெயந்தி) ஆகியவற்றை தவிர இதர நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.போட்டி இருந்தால், சட்டமன்ற குழுக்கள் அறையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்

தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அவை வருமாறு:-

தேர்தல் தொடர்பான பணிகளின்போது ஒவ்வொருவரும் முக கவசம் அணிய வேண்டும். தேர்தல் பணிக்கான அறையின் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். கிருமிநாசினி திரவம் வைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவிக்காலம்

முகம்மது ஜானின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி முடிவடைய இருந்தது. எனவே, இந்த காலியிடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், அந்த நாள்வரை பதவியில் இருக்கலாம். அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் ராஜினாமா செய்ததால், இன்னும் 2 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்