தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் 8-ந் தேதி காலமானார். அவர் பீகாரில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. போட்டி இருக்கும்பட்சத்தில், டிசம்பர் 14-ந் தேதி தேர்தல் நடந்து அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது