தேசிய செய்திகள்

சுகாதாரம், மருத்துவ துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டாக்டர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும் மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்துவதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இமாசலபிரதேச மாநிலம் சிம்லா, குலு மாவட்டங்களில் சட்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 210 மெகாவாட் நீர்மின் திட்டத்தில் ரூ.1,810 கோடி முதலீட்டுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வானியல் துறையில் ஒத்துழைப்பதற்காக இந்தியா-ஸ்பெயின் இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில், இந்தியா சார்பில் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, மந்திரிசபை கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்