தேசிய செய்திகள்

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் மதுக்கடைகள் - பப்கள் கேரளா அமைச்சரவை ஒப்புதல்

கேரளா முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் மதுக்கடைகள் மற்றும் பப்கள் அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்:

தகவல் தொழில்நுட்பத் துறையில் பப்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து அங்கு பப்கள் மதுபான பார்லர்கள் அமைத்து கொள்ள கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.இந்த பப்களில் ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல் வசதிகள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.'பப்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், மதுபானம் வழங்குவதற்கு வசதியான பார்லர்கள் என கூறப்பட்டு உள்ளது.

2022-23 நிதியாண்டிற்கான புதிய மதுபானக் கொள்கை கேரள மாநிலத்தில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தள்ளி பாதுகாப்பாக இருக்கும் பகுதிகளில் பெவிகோ(BEVCO) மதுபானக்கடைகள் தொடங்கப்படும்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு