தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று தவணைகளாக விடுவிக்கப்படும் என்றும் இதில், ரூ.7,774 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகளின் மையப்படுத்தப்பட்ட கொள்முதல் உள்பட கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையானவை அனைத்தும் இதன்மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை