தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

பிரதமர் மோடியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது..மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தி உள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 641 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில், இன்று அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது