இம்பால்,
மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் வியட்டம் குல்லன் - கோகென் கிராமத்தில் பாதுகாப்புப்படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின்போது கிராம சாலையின் பொதுப் பகுதியிலிருந்து பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட பொருட்களில் துப்பாக்கிகள், பிஸ்டல், கார்பைன், மோட்டார், கையெறி குண்டுகள் மற்றும் சீன ரக கையெறி குண்டுகள் ஆகியவை அடங்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.