தேசிய செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா?: கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் - ஐதராபாத்தில் இன்று நடக்கிறது

ஐதராபாத்தில் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சென்னைக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை உரிய முறையில் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் தொடர்புடைய மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கிருஷ்ணா நீர் மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை