தேசிய செய்திகள்

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரதமர் மோடி 2-முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேனா உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனடா-இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை