பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கை அம்மாநில அரசு ரத்து செய்தது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் மதுபான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல இன்று திறக்கப்பட்டிருந்தன.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து வழக்கம் போல இயங்கியது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.