அரியானாவில் இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் வன் முறை சம்பவங்களில் தொடர்புடைய குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் . இவருக்கு அரியானா போலீசார் லுக வுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இவர் குர்மீத் ராம் ரஹீமின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்பட்டார். ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஹனி பிரீத்தை இன்று போலீசார் கைது செய்து உள்ளனர்.