தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கார் விபத்து: தாஜ்மகாலை பார்க்க சென்ற 8 பேர் சாவு

உத்தரபிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் தாஜ்மகாலை பார்க்க சென்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

மதுரா,

உத்தரபிரதேசத்தின் கவுதம்புத் நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜெவர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்காக நேற்று காலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் 5 பெண்கள் உள்பட 8 பேர் இருந்தனர். இந்த கார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மதுராவுக்கு அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிபதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தாஜ்மகாலை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மதுராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...