சியோனி,
மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பந்தோல் பகுதியில் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.