தேசிய செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகன் பலி

பெலகாவியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்தனர்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகா மல்லப்புரா கிராமத்தை சேர்ந்தவர் அனில் (வயது 35). இவரது மனைவி பாரதி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் வேதாந்தா என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் ராக்ஷி சர்க்கிள் பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மற்றொரு கார் மீது மோதி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததில் பாரதி மற்றும் 6 வயது சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் ஹுக்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்