தேசிய செய்திகள்

மந்திரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் மீது தாக்குதல், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

நில அபகரிப்பில் ஈடுபட்டதாக மந்திரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஆலப்புழா,

கேரள மாநிலம் குட்டநாட்டில் கழிமுக பகுதியில் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி நில அபகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ச்சியாக செய்தி வெளியிட்ட ஆசியாநெட் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆழப்புழா அலுவலகத்தில் நின்ற கார் நொறுக்கப்பட்டது. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பிரசாத் பேசுகையில், நேற்று இரவில் இரண்டு மணியளவில் நான் தூங்க சென்றுவிட்டேன், அப்போதுதான் தாக்குதல் நடந்து உள்ளது. சாண்டிக்கு எதிராக 20 செய்திகளை வெளியிட்டு உள்ளேன்,என குறிப்பிட்டு உள்ளார்.

நில அபகரிப்பில் ஈடுபட்டதாக மந்திரிக்கு எதிராக வெளியிட்ட செய்தி செய்தி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்தி நிறுவன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் உத்தரவிட்டு உள்ளார். முழு விசாரணை நடத்தவும், ஆசியாநெட் அலுவலகத்தில் கார் நொறுக்கப்பட்டதில் குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என பினராய் விஜயன் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது என டிஜிபி லோக்நாத் பெகாரா கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கிவிட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், நம்முடைய மாநிலத்தில் இது நடந்து இருக்க கூடாது. இது பத்திரிக்கை சுதந்திரம் மீதான தாக்குதல். பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான எந்தஒரு சவாலும் ஜனநாயகத்தை பாதிக்கும். இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை தேவையாகும், என கூறிஉள்ளார். இடதுசாரி கட்சியை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் ராஜசேகரன், ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளியே கொண்டு வந்ததற்காக மீடியாக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஜனநாயகத்தில் நியாயப்படுத்த முடியாது என கூறிஉள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...