தேசிய செய்திகள்

கார்-தனியார் பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு

பாகேபள்ளி அருகே கார்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கோலார் தங்கவயல்:

கார்-தனியார் பஸ் மோதல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா தொட்டகேஞ்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா (வயது 50). இவரது மனைவி அஞ்சலம்மா (48). இந்த தம்பதியின் மகன் அருணா. இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் காரில் பாகேபள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகேட் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் வெங்கடகிருஷ்ணா உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

3 பேர் சாவு

இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடகிருஷ்ணா, அஞ்சலம்மா, அருணா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகேபள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரையும், தனியார் பஸ்சையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து பாகேபள்ளி புறநகர் போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து