புதுடெல்லி,
இந்தியாவில், மும்பை-ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரெயில் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.