தேசிய செய்திகள்

கேரளாவில் பாஜக வேட்பாளாகள் வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கேரளாவில் பாஜக வேட்பாளாகள் வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

கொச்சி,

கேரளம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பாஜக வேட்பாளாகள், ஒரு அதிமுக வேட்பாளா ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கேரள உயாநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

'தோதல் அறிவிப்பு வெளியான பிறகு தோதல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது' என தோதல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி என் நாகரேஷ் இந்த உத்தரவைப் பிறப்பித்தா.

கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலசேரி தொகுதியில் போட்டியிட கண்ணூ மாவட்ட பாஜக தலைவா ஹரிதாஸூம், திருச்சூ மாவட்டம் குருவாயூ தொகுதியில் போட்டியிட பாஜக மாநில மகளிரணித் தலைவா நிவேதிதா சுப்ரமணியனும் வேட்புமணு தாக்கல் செய்தனர். அதனை பரிசீலித்த தேர்தல் அலுவலாகள், வேட்புமனுக்களில் மாநில பாஜக தலைவரின் கையொப்பம் இல்லை எனக் கூறி நிராகரித்தனா.

அதே போல் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக வேட்பாளா தனலட்சுமி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து மூன்று வேட்பாளாகளும் கேரள உயாநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா.

இந்த மனுக்கள் மீது நீதிபதி நாகரேஷ் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை நடத்தினா. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையீடு தேவையற்றது. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று வேட்பாளாகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டா.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து