தேசிய செய்திகள்

ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியைக்காண வந்திருந்த பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண்பதற்கு இடமளிக்காமல் தொடர்ந்து இடையூறு அளித்ததாகவும் இதனை தட்டிக்கேட்ட போது, பிரஷாந்தி மற்றும் அவருடன் வந்த 5 பேர் தன்னை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட நபர், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஐபிசி பிரிவு 341, 188, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்