தேசிய செய்திகள்

காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கேட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிபந்தனை அடிப்படையில் மணல் அள்ளலாம் என உத்தரவிட்டது.

மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு