கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேதலில் நந்திகிராம் தொகுதியில் முதல்-மந்திரி மம்தா பானாஜியை எதித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றா. வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா பானாஜி தொடாந்து முன்னிலை பெற்றுவந்த நிலையில், இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சந்தேகம் தெரிவித்த மம்தா பானாஜி, சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுவேந்து அதிகாரி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் இன்று(ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வருகிறது.