தேசிய செய்திகள்

வன்முறை சம்பவங்கள்: டெல்லி போலீசின் மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம் கருத்து

டெல்லியில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள், டெல்லி போலீசின் மிகப்பெரிய தோல்வி என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு டெல்லியில் நடந்து வரும் சம்பவங்கள், தூண்டி விடப்பட்டவையாக இருந்தாலும், தானாக நடந்திருந்தாலும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி, இப்போதும் வன்முறை நீடித்து வருகிறது. டெல்லி போலீசின் மிகப்பெரிய தோல்வியையே இது காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு