அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை, கணக்கு ஆசிரியர் ஒருவரை 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவன் தாக்கியது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவன் தேர்வு சரிவர எழுதாத காரணத்தினால், குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளான்.
இதன் காரணமாக ரவீந்தர் என்ற கணக்கு ஆசிரியர் மாணவனின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் மாணவனைப்பற்றி கூறியுள்ளார். மாணவனின் குறைகளை எல்லாம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த மாணவன் சம்பவ தினத்தன்று, வகுப்பில் தனியாக இருந்த ரவீந்திரனை கூர்மையான ஆயுதம் கொண்டு 10-க்கும் மேற்பட்ட முறை தாக்கியுள்ளான்.
அதைத் தொடர்ந்து அருகில் இருந்த ஆசிரியர் ஒருவர் இதைக் கண்டு தடுத்ததால், அவன் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டான்.
அதன் பின் உடனடியாக ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். கூர்மையான ஆயுதம் கொண்டு தலையிலே தாக்கியதால், தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ