புதுடெல்லி,
ரெயில் டிக்கெட்கள் மற்றும் தேநீர் கோப்பைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம், அரசின் சாதனைகள், பிரசார வாசகங்கள் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரெயில்வேக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் டிக்கெட்டில் அரசியல் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரெயில் டிக்கெட், ரெயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் வளாகங்களில் எந்த அரசியல் தலைவரின் புகைப்படமோ, அரசியல் விளம்பரமோ இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
விளம்பர நிறுவனங்களுக்கும் உரிய முறையில் இதை தெரியப்படுத்த வேண்டும் என கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.