தேசிய செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்; சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர கர்நாடகா முடிவு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படும் என கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டம் குடிநீர், மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களுக்கு செயல்படுத்தப்படுவதால், உடனே அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கு சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மேகதாது திட்டம் குறித்து பசவராஜ் பொம்மை சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த மனு விசாரணைக்கு வரும்போது, மாநில அரசு அங்கு எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது, கர்நாடகத்தின் நிலை குறித்து தெரிவிக்கப்படும். தமிழக அரசு காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்துகிறது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்னொரு வழக்கு தொடரப்படும். இதற்கு மத்திய அரசிடம் நாங்கள் ஆட்சேபனை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு