தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக எம்.பி.க்களை மத்திய அரசு அழைத்து பேசாதது வருத்தமளிக்கிறது- தம்பிதுரை

காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக எம்.பி.க்களை மத்திய அரசு அழைத்து பேசாதது வருத்தமளிக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #CauveryManagementBoard #Thambidurai #AIADMK

புதுடெல்லி

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு 5ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியால் தொடர்ந்து எந்த அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பாராளுமன்றம் தொடங்கியதில் இருந்து அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்றம் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 14 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி இல்லையெனில் தமிழகம் இல்லை என்றும் இது ஜீவாதார பிரச்சினை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை .

மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் அதிமுக தயாராக உள்ளது. காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக எம்.பி.க்களை மத்திய அரசு அழைத்து பேசாதது வருத்தமளிக்கிறது என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்