தேசிய செய்திகள்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 16-வது கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதன்படி தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திருராமமூர்த்தி, காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களின் அணை நீர்மட்டம், மழை அளவு மற்றும் நீர்வரத்து புள்ளி விவரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த கூட்டத்துக்குப்பின் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் பேசுகையில், நீர்நிலைகளில் நீர்மட்ட அளவு திருப்திகரமாக உள்ளது. குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 10-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு