தேசிய செய்திகள்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #CauveryManagementBoard

புதுடெல்லி

காவிரி வரைவு திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு. பி. சிங் - மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டம் தொடர்பாக தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது .

இன்றே மத்திய அரசு காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறது. தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இன்று காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என கூறபட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு