தேசிய செய்திகள்

சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசுக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக கூறி மோதிக் கொண்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுங்கிலான் பூர்வல் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவருமே சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. எனவே இதில் எங்களால் தலையிட இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்