தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து ரஷியாவிற்கு ஆள் கடத்தல் - 4 பேர் கைது

கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷியாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையைச் சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவைச் சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷியாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷியாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது 4 பேரை கைது செய்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்