புதுடெல்லி,
மும்பை கலால் வரித்துறை உதவி கமிஷ்னர் அசோக் நாயக், அமலாக்கப்பிரிவு வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதமாக செயல்பட லஞ்சம் கேட்டு உள்ளார். வழக்கில் சாதமாக செயல்பட ரூ. 15 கோடி கேட்டு உள்ளார். ரூ. 15 கோடியையும் தவணை முறையில் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட நபரும் ஒப்புக் கொண்டு உள்ளார். அவர் ரூ. 1.25 கோடியை அசோக் நாயக்கிற்கு லஞ்சமாக கொடுத்த போது சிபிஐயிடம் சிக்கிக்கொண்டார். சிபிஐ அதிகாரிகள் அசோக் நாயக்கை கைது செய்து உள்ளனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.