தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி ஹரிஷ் ரவத் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

அப்போது, பா.ஜனதாவுக்கு தாவிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, ஹரிஷ் ரவத் பண பேரம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது.

இந்த குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதையடுத்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு