புதுடெல்லி,
2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர சட்டரீதியாக வலுவான முகாந்திரம் உள்ளது. சி.பி.ஐ. கொடுத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.