தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ரெயில் விபத்து குறித்து புவனேஸ்வரில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒடிசா மாவட்டம் பாலசோரில் கடந்த ஜுன் மாதம் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 275 பேர் பலியானதுடன் சுமார் 1175-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ஏற்கனவே ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த ஜுன் 6-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றபட்டு விசாரணை உடனடியாக தொடங்கபட்டது.

இந்த ரெயில் விபத்து தொடர்பாக மரணம் விளைவிக்க கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றிற்காக, இந்திய தண்டனை சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒடிசா ரெயில் விபத்து நடத்த பகுதியில் பணியாற்றிய சீனியர் செக்ஷன் பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, செக்ஷன் பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீஷியன் பப்புகுமார் ஆகிய 3 பேரையும் கடந்த ஜூலை 7-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இந்த பிரிவுகளின் கீழ் போகேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. விபத்து நடந்த 2 மாதத்திற்க்குள் சிபிஐ புலன் விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்