தேசிய செய்திகள்

ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழுவை சிபிஐ நியமித்தது

ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழுவை சிபிஐ நியமனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

சிபிஐ இயக்குராக இருந்த அலோக் வர்மா, இணை இயக்குநராக இருந்த அஸ்தானா ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் காரணமாக மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அஸ்தானாவிற்கு எதிரான லஞ்சப்புகாரில் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை என்று சென்ற நிலையில் இதில் தலையிட்ட மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டது. புதிதாக சிபிஐ இயக்குநராக நாகேஸ்வரராவை நியமித்தது. புதிய சிபிஐ இயக்குநராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள நாகேஸ்வரராவ், ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க புது குழுவை நியமனம் செய்துள்ளார். விசாரணை குழுவிற்கு சதிஷ் தாகரை நியமனம் செய்துள்ளார்.

லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிராக சிபிஐ 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரிக்கிறது.

மாற்றியமைக்கப்பட்ட விசாரணை குழுவில் சிறந்த அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர். பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும் என சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்