தேசிய செய்திகள்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் பயங்கரமான உண்மைகளை சி.பி.ஐ. அறிக்கையாக தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், பயங்கரமான உண்மைகளை சி.பி.ஐ. அறிக்கையாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொல்கத்தாவில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சி.பி.ஐ., கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து சி.பி.ஐ. சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் மிக மிக பயங்கரமான உண்மைகள் உள்ளதாக சி.பி.ஐ. வக்கீல் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், மிக பயங்கரமான உண்மைகள் உள்ளது என்பதற்காக நாங்கள் கண்ணை மூடிக்கொள்ள முடியாது. ராஜீவ் குமார் உள்பட மற்றவர்களும் இதற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். எதிர்தரப்பினரின் கருத்துகளை அறியாமல் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ராஜீவ் குமாருக்கு எதிராக உரிய மனுவை சி.பி.ஐ. 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்