தேசிய செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு

2-ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த 2017-டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, சிபிஐ மனு தொடர்பாக பதிலளிக்க ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்