தேசிய செய்திகள்

லஞ்சம் பெற்றதாக புகார்; இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளை அதிரடியாக கைது செய்தது சிபிஐ

லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் 4 பேரை சிபிஐ கைது செய்தது.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக லஞ்சம் பெற்றதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிபிஐ இந்திய விளையாட்டு ஆணையத்தின் வளாகத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. சிலரிடம் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது என சிபிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியது. சோதனைக்கு இடையே சிபிஐ இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் உள்பட 4 அதிகாரிகளை கைது செய்துள்ளது. மேலும் இருவரை கைது செய்துள்ளது. ஆணையத்தின் போக்குவரத்து துறையில் ஊழல் நேரிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி