தேசிய செய்திகள்

ராஷ்மி சுக்லாவுக்கு ஆதரவாக தலையிட சி.பி.ஐ. முயற்சி; மராட்டிய அரசு, ஐகோர்ட்டில் குற்றச்சாட்டு

ராஷ்மி சுக்லாவுக்கு எதிரான டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கில் அவருக்கு ஆதரவாக தலையிட சி.பி.ஐ. முயற்சி செய்வதாக ஐகோர்ட்டில் மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது.

மாநில அரசு மனு

முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அளித்த மாமூல் புகாரின் பேரில், சி.பி.ஐ. மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக

மாநில அரசு சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அனில்தேஷ்முக்கிற்கு எதிரான வழக்கில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சி.பி.ஐ. தேவையில்லாமல் சில பகுதியை வழக்கில் சேர்த்து உள்ளதாக கூறியிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, என்.ஜே. ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

தலையிட முயற்சி

அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், அனில் தேஷ்முக் மற்றும் மாநில அரசின் மனுவை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரபிக் தாதா, அனில் தேஷ்முக்கிற்கு ஆதரவாக

இருப்பது போல நான் தெரியவிரும்பவில்லை. அவர் தற்போது எனது மந்திரி கிடையாது என்றா.மேலும் அவர், சி.பி.ஐ. அனில் தேஷ்முக்கிற்கு எதிராக பதிவு செய்த வழக்கில் சச்சின் வாசே பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டது, போலீஸ் துறையில் நடந்த பணியிடமாற்றம், நியமனத்தையும் சேர்த்து உள்ளனர். இது எதுவும் பரம்பீர் சிங்கின் புகாரில் இல்லை. மாநில அரசு ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் விவகாரங்களில் சி.பி.ஐ. மூக்கை நுழைக்கிறது. இதுபோன்ற பகுதிகள் ஐ.பி.எஸ். அதிகா ராஷ்மி சுக்லாவுக்கு எதிரான டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கில் தலையிடும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு எதிரானது அல்லது. ஆனால் அவர்கள் வழக்கில் சேர்த்து உள்ள சில விஷயங்கள் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி உள்ளது என்று வாதிட்டார்.இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பு வாதங்களை ஐகோர்ட்டு வருகிற 21-ந் தேதி கேட்கிறது.

ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது மராட்டிய அரசு டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்