புதுடெல்லி,
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான மோதலை தொடர்ந்து அவர்களை மத்திய அரசு கட்டாய விடுமுறையில் அனுப்பியது. பின்னர் சி.பி.ஐ. தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது. அவருக்கு இயக்குனருக்கான அதிகாரங்களையும் அளித்தது.
இந்நிலையில், நாகேஸ்வர ராவ், சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 1986-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவ், கடந்த 2016-ம் ஆண்டில் சி.பி.ஐ. பணியில் இணைந்தார்.