தேசிய செய்திகள்

கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா? சுப்ரீம் கோர்ட் இன்று முடிவு

கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா? என்பதை சுப்ரீம் கோர்ட் இன்று முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt

தினத்தந்தி

புதுடெல்லி,

;ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் ஒரு வாரத்துக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பிலும், சண்டீகருக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று அந்தச் சிறுமியின் தந்தை சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கதுவா வழக்கை திங்கள்கிழமை (மே 7) வரை விசாரிக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். எனவே, வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா? என்பது குறித்து திங்கள்கிழமை(இன்று) முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்