தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை; முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரிந்துரை

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பரிந்துரை செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ஹத்ராசில் நடந்த துரதிருஷ்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவதற்காகவும், சி.பி.ஐ. மூலம் ஒரு விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு பரிந்துரைக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பை இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நடைபெறும் விசாரணையே தேவை என அவர்கள் கூறியுள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு