தேசிய செய்திகள்

ஹரியானா முன்னாள் முதல் மந்திரி ஹூடா இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

ஹரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி புபிந்தர் சிங் ஹூடா இல்லத்தில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

ரோடக்,

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி பணப்பலன் அடைந்ததாக ஹரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி புபிந்தர் சிங் ஹூடா மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உட்பட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக ஹரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி புபிந்தர் சிங் ஹூடா இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்