தேசிய செய்திகள்

2018-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ 206 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது

2018-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ 206 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2018-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 206 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 45 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என மத்திய அரசு தரப்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, 2017-ம் ஆண்டு 338 வழக்குகள் பதிவு செய்தது. 2016-ம் ஆண்டு 400 வழக்குகளையும், 2015-ம் ஆண்டு 441 வழக்குகளையும் சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 168 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. 2016-ல் 272 வழக்குகளிலும், 2015-ம் ஆண்டு 361 வழக்குகளிலும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார். 23 வழக்குகளில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்