தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13 -ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.gov.in, cbse.nic.in, ஆகிய சி.பி.எஸ்.இ-யின் அதிகாரபூர்வ இணையதளங்களில் பொதுத்தேர்வு அட்டவணையை மாணவ-மாணவிகள் பார்க்கலாம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்