தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது? இன்னும் முடிவு செய்யப்படவில்லை

கொரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

அதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சரியான மதிப்பீட்டு முறையை உருவாக்க மத்திய அரசுக்கு 2 வார காலஅவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு 3-ந் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், 12-ம் வகுப்பு

மாணவர்களுக்கு எந்த வழிமுறையில் மதிப்பீடு வழங்கலாம் என்று பரிந்துரைப்பதற்காக ஒரு 13 பேர் குழுவை சி.பி.எஸ்.இ. அமைத்தது. அந்தக் குழு தனது பரிந்துரைகளை நேற்று (14-ந் தேதி) சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சமர்ப்பிக்காத நிலையில், அதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சரியான, நியாயமான மதிப்பீட்டு முறையை உருவாக்குவதற்கான விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையிலான இறுதி பரிந்துரைகள், சி.பி.எஸ்.இ.யிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், மாணவர்கள் 10, 11-ம் வகுப்புகளில் பற்ற மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள், உள் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இறுதி முடிவு இனிமேல்தான் எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து