புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. வாரிய தேர்வுகள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும். இதற்கான தேர்வு கால அட்டவணை நவம்பரில் வெளியிடப்படும். ஆனால், கொரோனா பாதிப்புகளால் இந்த அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
எனினும், பிப்ரவரி வரை தேர்வு நடைபெறாது என மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவியர் பலர் தேர்வு கால அட்டவணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பற்றி வருகிற டிசம்பர் 31ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிசாங்க் அறிவிப்பு வெளியிடுவார் என்று மத்திய கல்வி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
இதற்காக @DrRPNishank என்ற டுவிட்டரை கவனமுடன் பின்தொடரும்படியும் மாணவ மாணவியரை அமைச்சகம் தனது டுவிட்டரில் கேட்டு கொண்டுள்ளது.