தேசிய செய்திகள்

பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உளவியல் சோதனை: சிபிஎஸ்இ உத்தரவு

பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 மாதங்களுக்குள் உளவியல் சோதனை நடத்த வேண்டும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

அரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் பகுதியில் உள்ள ரயன் சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய ஊழியர் கைது செய்யப்பட்டார். 7-வயது சிறுவன் பள்ளி வளாகத்திலேயே கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டன.

இந்த நிலையில், மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ இணையதளத்தில் இந்த சுற்றறிக்கையின் முழு வடிவம் இடம் பெற்றுள்ளது. அந்த சுற்றறிக்கையில், பள்ளியில் பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும் என்பது பள்ளி மாணவனின் அடிப்படை உரிமையாகும். பள்ளி வளாகத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு என்பது பள்ளிக்கான தனிப்பட்ட உரிமையாகும். பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் உளவியல் சோதனை நடத்த வேண்டும். இதன் அறிக்கையை 2 மாத காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.

முழுமையாக விரிவாக இந்த சோதனை நடத்த வேண்டும். அனைத்து பணியாளர்களின் பின்புலம் குறித்த தகவலை அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பகிர்ந்து சரிபார்க்க வேண்டும். உரிய ஆவணங்கள் மற்றும் சரிபார்த்தல் ஆவணங்கள் வைத்திருக்கும் முகமைகள் மூலமாகே ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இருக்கவேண்டும். அனைத்து நேரத்திலும் சிசிடிவி கேமிராக்கள் இயங்குவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். வெளிநபர்கள் பள்ளி வளாகம் வருவதை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டும் போன்றவை அதில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்